குளத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ; குடும்ப அட்டைகளை சாலையில் எறிந்து போராட்டம்
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கயத்தார் ஒன்றியம் சூரியமினிகன் கிராமத்தில் உள்ள குளத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு அந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயம் களை இழந்து மக்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உயர் அழுத்த மின் கோபுரங்கள அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததால் கிராமத்தினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதிகாரிகள மற்றும்போலீசார் நேரில் வந்து பேச்சுசுவார்த்தை நடத்தினார்கள். தங்கள் முடிவில் கிரமாத்தினர் உறுதியாக இருத்தன்ர்.
மக்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது, மீண்டும் அந்த பனி தொடரக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் அங்கு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்/. நேற்று 5 வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. இரவும் பகலும் அங்கேயே கூடாரம அமைத்து தங்கி இருந்தனர்,’

இந்த நிலையில் இன்று தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். கிராம மக்கள் இன்று 19.01.2026 – காலை 10.30 மணியளவில் கயத்தார் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தங்கள் குடும்ப அட்டைகளை சாலையில் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு அளித்து கலந்து கொண்டனர்,
இதனால் இந்த பகுதியில் பதற்றம் நிலவியது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் ஏற்றி ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.







