பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
கோவில்பட்டி வேலாயுதபுரம் நகராட்சி திமுக கவுன்சிலர் லவராஜா ஏற்பாட்டில், வேலாயுதபுரம் பகுதியில் உள்ள ஏழை எளியோர் பலருக்கு வேட்டி, சேலை மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன. அதேபோல், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும் வேஷ்டி, சேலைகள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா தலைமை தாங்கி , நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை தொடக்கி வைத்தார். தொழிலதிபர் அமலி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திமுக நகர மன்ற உறுப்பினர் லவராஜா செய்திருந்தார்.
வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் தர்மராஜா. ராஜா நாகராஜன் சேர்முகசாமி. கேசவன்.சதீஸ்குமார். சிவராமன். அய்யதுரை.பட்டதுரை. ஹரி.கிருபா. முனியஜெயராம். மதன்குமார். சந்தோஷ்.சுமன் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் லட்சுமி செல்வராணி மகாலட்சுமி. மகாலட்சுமிகண்ணன். சரமாரியம்மாள். சுதா. விஜி. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்,
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திமுக நகர மன்ற உறுப்பினர் லவராஜா செய்திருந்தார்







