• October 22, 2026

விளாத்திகுளத்தில் 25ம் தேதி தேமுதிக ரதயாத்திரை; பிரேமலதா பங்கேற்கிறார்

 விளாத்திகுளத்தில் 25ம் தேதி தேமுதிக ரதயாத்திரை; பிரேமலதா பங்கேற்கிறார்

விளாத்திகுளத்தில் வரும் 25ந்தேதி நடைபெற உள்ள  உள்ளம் தேடி இல்ல நாடி கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியில் பொதுசெயலாளர்  பிரேமலதா கலந்து கொள்கிறார்,.

தேசிய முற்போக்கு திராவிடகழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில்   மாவட்ட அலுவலகத்தில் வடக்கு மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாநில கேப்டன் மன்ற செயலாளர் வைரம் மாவட்ட அவைதலைவர் கொம்பையா பாண்டியன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக பொதுசெயலாளர்  பிரேமலதா வரும் 25 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை தூத்துக்குடி விளாத்திளத்தில் `உள்ளம் தேடி இல்ல நாடி கேப்டன் ரத யாத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

 விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சிறப்புரை ஆற்றுகிறார். அதை முன்னிட்டு கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் கீழஈராலில் பிரேமலதா வுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்து விளாத்திகுளம் அழைத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது

விளாத்திகுளம் கூட்டத்திற்கு  பெரும்திரளானோர் பங்கேற்க முடிவுசெய்யப்பட்டது ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மலைராஜ்,  பொதுகுழு உறுப்பினர் கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியசெயலாளர் விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளர் தங்கச்சாமி, புதூர் ஒன்றியசெயலாளர் கிழக்கு ஆறுமுகபெருமாள், மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியசெயலாளர் பொன்ராஜ், கயத்தார் கிழக்கு ஒன்றியசெயலாளர் அருண், மேற்கு ஒன்றியசெயலாளர் நடராஜன் கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர் மேகலிங்கம், மாவட்ட சமுகவலைதள அணி சிவமுருகன், சென்னயம்பட்டி நாராயணண் ,விளாத்திகுளம் பொன்ராஜ் , நடராஜன் கடம்பூர் பொறுப்பாளர் பரும்புக்கோட்டை கனகராஜ் கீழஈரால் சுரேஷ், சிங்கிலிபட்டி சங்கரன்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *