மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற பல்கலைகழகங்களுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 71 கிலோ எடை பிரிவில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையில் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் கோபி தர்ஷன் முதலிடம் பெற்றார். இதன்மூலம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற உள்ள பல்கலைகழகங்களுக்கு இடையிலான அகில இந்திய பளு தூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலை கழகத்தில் ஜனவரி […]
நகராட்சி மற்று குடிநீர் வழங்கல் துறையில் பணியாளர்களை நியமிப்பதில பல நூறு கோடி லஞ்சம் கைமாறியுள்ளதாக வந்த புகாரை ஆதாராங்களுடன் மத்திய அமலாக்கத் துறை தமிழக டி.ஜி.பிக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்ய கோரியும் இதுவரை தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், உடனடியாக வழக்கு பதிய உத்தரவிடக் கோரி அ.தி.மு.க. எம்பி ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான […]
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுப்பட்ட அதிமுக என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதற்கிடையே சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிகளுக்கு தாவி […]
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 16 வயது சிறுமியை தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது 70)) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மேற்படி தங்கபாண்டியிடம் கேட்ட போது தங்கபாண்டியன் மகள் தூத்துக்குடியைச் சேர்ந்த வேதசெல்வி (42) மற்றும் மகன் ராஜா (34) ஆகிய இருவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் […]
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலசமுத்திரம் பகுதியில் கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்கள் விபத்துகுள்ளானதில் காரில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர். கார்த்திக் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லாரி ஓட்டுநரான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இர்பானுல்லாபெக் (35) என்பவர் மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் காரில் வந்த 3 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மதுபோதையில் லாரி ஓட்டி காயம் ஏற்படுத்தியதால் கொலை அல்லாத […]
சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென்னிந்திய அளவிலான ஆக்கி போட்டியில் கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம்.கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணன், மணிமாறன், விஷால் ஆகியோர் பங்கேற்று விளையாடினார்கள். இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவில் நடைபெற இருக்கும் அகில இந்திய ஆக்கி போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள் இந்த மாணவர்களை கல்லூரி செயலாளர் கே.கண்ணன், முதல்வர் ஆர்.செல்வராஜ், உடற்கல்வி இயக்குனர் டி.ஜெயசிவா, மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள்தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். ஆண்டுக்கு சராசரியாக […]
கவர்னர் பதவியை ரத்து செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்;முதலமைச்சரை வலியுறுத்தி ம.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில், இன்று 23.01.2026 (வெள்ளிக் கிழமை) காலை, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.ழகப் பொதுச்செயலாளர் வைகோ கருத்துரை வழங்கினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள்செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-*கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையின் மரபையும் மாண்பையும் துச்சமாகக் கருதி […]
“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” என்பது தமிழக அரசின் ஒரு திட்டம். ஜனவரி 31, 2024 ல் நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தின் நோக்கம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் கிராமத்துக்கு சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் நேற்று (ஜனவரி […]
மு.க,ஸ்டாலின் முன்னிலையில் கடம்பூர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்; தினகரன் மீது கடும் குற்றச்சாட்டு
பாஜக கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்ததற்கு அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் கடம்பூா் மாணிக்கராஜாவை அக்கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்குவதாக இன்று காலை அறிவித்தார். அதே நேரத்தில் சென்னையில் இன்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.பி.அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தனர்., அதே […]







