அகில இந்திய பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி மாணவர் தேர்வு
Oplus_16908288
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற பல்கலைகழகங்களுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 71 கிலோ எடை பிரிவில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையில் 2ம் ஆண்டு பயிலும் மாணவர் கோபி தர்ஷன் முதலிடம் பெற்றார்.
இதன்மூலம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற உள்ள பல்கலைகழகங்களுக்கு இடையிலான அகில இந்திய பளு தூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலை கழகத்தில் ஜனவரி 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள அகில இந்திய பளு தூக்கும் போட்டியில் கோபி தர்ஷன் பங்கேற்கிறார்.
அகில இந்திய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்கும் மாணவர் கோபி தர்ஷனை கல்லூரி செயலாளர் கண்ணன், முதல்வர் செல்வராஜ், உடற்கல்வி இயக்குனர் ஜெயசிவா உள்பட பேராசிரியர்கள் பலர் வாழ்த்தினர்.







