தொடக்கப்பள்ளி மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட ஆட்சியர் இளம்பகவத்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” என்பது தமிழக அரசின் ஒரு திட்டம். ஜனவரி 31, 2024 ல் நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தின் நோக்கம், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் கிராமத்துக்கு சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் நேற்று (ஜனவரி 22) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஏரல் வட்டம் முக்காணி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளிக்கு வந்த ஆட்சியரை மாணவிகள் வணக்கம் தெரிவித்தும், பரரதநாட்டியம் ஆடியும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். மாணவர்களின் உற்சாக வரவேற்பை கண்டு ஆட்சியர் மகிழ்ச்சி அடைந்ந்தார்/. மாணவிகளின் நாட்டியத்தை ரசித்த ஆட்சியர் அவர்களை பாராட்டினார்.
தன்னை மகிழ்ச்சிப்படுத்திய மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டே காலை உணவான ரவை உப்புமாவை உண்டு ரசித்தார். உணவு நன்றாக இருந்ததாக பள்ளி ஆசிரியர்களை பாராட்டினார்.
மேலும் இரண்டாவது முறையாக உணவை வாங்கி சாப்பிட்ட ஆட்சியரை கண்ட மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர், 3 ம் வகுப்பு மாணவி இராஜசிகாசினி தனது தந்தை எழுதிய கவிதை நூலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இதில் மாணவியின் தந்தையும் இதே பள்ளியில் கலவி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்சியர் இளம்பகவத் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளிக்கு கிடைத்த பரிசுகளை ( ஷீல்டுகள் ) பார்வையிட்டு தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை பாராட்டினார். மேலும் ஆட்சியர் 2026 – 2027 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை வழங்கினார்.

ஆட்சியர் ஆசிரியர்களிடம் நான் அடிக்கடி உங்கள் பள்ளியை கவனித்துக் கொண்டே செல்வேன், பள்ளியின் வெளியே வைக்கும் டிஜிட்டல் போர்டுகள் உங்கள் செயல்பாட்டினை எடுத்துக் காட்டுகிறது. மேலும் தலைமை ஆசிரியை வசந்த குமாரி சிறப்பாக செயல்படுவதாகவும் அவரை விட்டு விடாதீங்க என்று பெருமை பட பேசினார்.
மாவட்ட ஆட்சியர் வருகையின் போது பள்ளித் தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி, ஆசிரியர்கள் பொன் மல்லிகா, தாமரை, வசந்தி சுவர்ணாம்பிகா,பாப்பு ரஜேஷ்,ஜெயா, பிரபா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவி பேச்சித் தாய், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சங்கர நாராயணன், கல்வி தன்னார்வலர் வேலாயுதம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி காசி லெட்சுமி ஆகியோர் இருந்தனர்







