கவர்னர் பதவியை ரத்து செய்வதற்கு முயற்சிக்க வேண்டும்;முதலமைச்சரை வலியுறுத்தி ம.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில், இன்று 23.01.2026 (வெள்ளிக் கிழமை) காலை, தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
ழகப் பொதுச்செயலாளர் வைகோ கருத்துரை வழங்கினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள்செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையின் மரபையும் மாண்பையும் துச்சமாகக் கருதி பேரவையில் தனது அரசியல் சட்டக் கடமையை ஆற்றாமல் வெளியேறியது கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டியவாறு கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க வேண்டுமா? என்பது குறித்து ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கலந்து பேசி அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதுடன் கவர்னர் பதவியை ரத்து செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.

மத்திய அரசு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
* கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து ,பேராபத்தை விளைவிக்கும் இந்திய உயர் கல்வி மசோதாவை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திமுக அறைகூவல் விடுக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட.ன







