அகில இந்திய ஆக்கி :எஸ். எஸ். டி. எம்.கல்லூரி மாணவர்கள் 3 பேர் தேர்வு
சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தென்னிந்திய அளவிலான ஆக்கி போட்டியில் கோவில்பட்டி எஸ். எஸ். டி. எம்.கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணன், மணிமாறன், விஷால் ஆகியோர் பங்கேற்று விளையாடினார்கள்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவில் நடைபெற இருக்கும் அகில இந்திய ஆக்கி போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள் இந்த மாணவர்களை கல்லூரி செயலாளர் கே.கண்ணன், முதல்வர் ஆர்.செல்வராஜ், உடற்கல்வி இயக்குனர் டி.ஜெயசிவா, மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.







