கோவில்பட்டியில் மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, கடந்த 2024ம் ஆண்டு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பிரியாத்தி (வயது 83) என்பவர் தனது மகன் பாலமுருகன் (38) என்பவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு […]
துபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்டு டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க நகை வர்த்தக நிறுவனங்கள் மூலமாக துபாயை நகை வர்த்தகத்திற்கான உலகின் முன்னணி மையமாக வலுப்படுத்தும் முயற்சி ஆகும். இது ஒருங்கிணைந்த நகை வர்த்தக சுற்றுச்சூழல் அமைப்பாக உருவாக்கப்படுகிறது. சில்லரை விற்பனை, மொத்த வியாபாரம் மற்றும் முதலீடு ஆகியவைகளை உள்ளடக்கிய செயல்பாடுகளை கொண்ட நிறுவனங்கள் இந்த வளாகத்தில் செயல்பட உள்ளன. […]
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை வந்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-‘ வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் என்னுடன் பயணிக்கும் சகோதரர்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவேன். தேர்தலில் போட்டியிடாதது எனது விருப்பம். நான் சுயநலமாக சிந்திக்கவில்லை, உடன் பயணிப்பவர்கள் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன்” […]
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.. வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது;- “நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம். அருணாசல பிரதேசம், திரிபுரா, மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரெயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளனமின் வாகன உற்பத்தியில் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அசாமில் செமிகண்டக்டர் […]
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போதுய் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. விபத்தில் சிக்கிய விமானம் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது இன்று காலை 8.45 மணியளவில் நடந்த இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, […]
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. தலைமையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (27/01/2026) நடைபெற்றது. திருச்சி,புதுக்கோட்டை,அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சந்தித்து கருத்துக்களை கேட்டனர். திமுக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கர், டி.ஆர்.பி […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்கை கழகம் மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கைவள பாதுகாப்பு மேற்கொண்டது. கோவில்பட்டி மூப்பன்பட்டி, நாலாட்டின்புதூர், ஆலம்பட்டி மற்றும் ஜமீன்தேவர்குளம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. நெல்லை மாற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் பருவமழையினால் நிரம்பும் நீர் தேக்கங்களிலும் உள்ள பறவை இனங்களை பாதுகாக்கும் விதமாகவும், இயற்கை ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு, ஆண்டு தோறும் […]
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் சிநிமிப்பட தணிக்கை சான்று வழங்குவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. இதற்கான காரணம் பற்றி அவர்கள் அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-ஜன நாயகன் படத்திற்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளன. ஒரு திரைப்படத்திற்கு எந்த மாதிரியான சான்று வழங்குவது என்பது தணிக்கை அதிகாரியின் முடிவாகும். வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதவாத மோதலை துாண்டுவதாக சில வசனங்கள் ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ளன. மத […]
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்,இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை […]
கோவில்பட்டி அருகே கடலையூர் கிராமத்தில் சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் 34 பேர் கலந்து கொண்டனர். இந்த சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த அந்த 34 தியாகிகளை நினைவு கூரும் வகையில் அங்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு ஸ்தூபியில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சியின் நகரத் தலைவர் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவர்கள் ரமேஷ் மூர்த்தி, வடக்கு மாவட்ட பொருளாளர் […]







