நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள்
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இயற்கை கழகம் மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள் சார் இயற்கைவள பாதுகாப்பு மேற்கொண்டது.
கோவில்பட்டி மூப்பன்பட்டி, நாலாட்டின்புதூர், ஆலம்பட்டி மற்றும் ஜமீன்தேவர்குளம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

நெல்லை மாற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் பருவமழையினால் நிரம்பும் நீர் தேக்கங்களிலும் உள்ள பறவை இனங்களை பாதுகாக்கும் விதமாகவும், இயற்கை ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு, ஆண்டு தோறும் ஜனவரி மாதம் நடந்து வருகிறது,.
பறவைகளின் இனப்பெருக்கம் முடிவடைந்து வலசை வரும் பறவைகளின் கணக்கெடுப்பு பணியை அகத்திய மலை மக்கள் சார் இயற்கைவள பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது,.

இக்கணக்கெடுப்பில் அரிய வகை பறவைகளான கொண்டை நீர்காகம், சிறிய நீர்காகம், இராக்கொக்கு, ஜம்புக்கோழி, நத்தைக்குத்தி நாரை, சங்குவளை நாரை, சாம்பல் நாரை, புள்ளிமூக்கு தாரா, சதுப்புநில உள்ளான், பெரிய மீன் கொத்தி, சாம்பல் கூழைக்கடா, வெள்ளை அரிவாள்மூக்கன் போன்ற 36க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர் பா. மகேஷ் குமார் செய்திருந்தார்.







