• March 6, 2026

‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்குவதற்கான உத்தரவு ரத்து ஏன்..? – நீதிபதிகள் விளக்கம்

 ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்குவதற்கான உத்தரவு ரத்து ஏன்..? – நீதிபதிகள் விளக்கம்

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் சிநிமிப்பட தணிக்கை சான்று வழங்குவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்துள்ளது. இதற்கான காரணம் பற்றி அவர்கள் அளித்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஜன நாயகன் படத்திற்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளன. ஒரு திரைப்படத்திற்கு எந்த மாதிரியான சான்று வழங்குவது என்பது தணிக்கை அதிகாரியின் முடிவாகும். வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதவாத மோதலை துாண்டுவதாக சில வசனங்கள் ஜன நாயகன் படத்தில் இடம் பெற்றுள்ளன. மத அடையாளங்களை அவதுாறு செய்வதை ஏற்க முடியாது


ஜனநாயகன்’பட வழக்கில் தணிக்கை வாரியம் தரப்புக்கு முறையான நேரம் வழங்கி தனி நீதிபதி விசாரிக்கவில்லை. மீண்டும் தனி நீதிபதி அமர்வில் முதலில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும். இதன்படி ‘ஜனநாயகன்’ திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு மீண்டும் ஐகோர்ட்டு தனி நீதிபதி பி.டி.ஆஷாவிற்கு மாற்றம் செய்யப்படுகிறது
மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பாமல் தணிக்கை சான்றிதழ் தர உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தணிக்கை வாரியத்திடம் விளக்கம் பெறாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உரிய விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. என
தணிக்கை வாரிய அதிகாரி புகாரின் அடிப்படையில் படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

மத அடையாளங்களை அவதூறு செய்வதை ஏற்க முடியாது? படத்தில் பாதுகாப்புப் படை சின்னம் பயன்படுத்தப்பட்டதால் நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டது. தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *