திருச்சியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்;|கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது


வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம். பி. தலைமையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (27/01/2026) நடைபெற்றது.
திருச்சி,புதுக்கோட்டை,அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் சந்தித்து கருத்துக்களை கேட்டனர்.
திமுக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவசங்கர், டி.ஆர்.பி ராஜா, கோவி. செழியன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொது மக்கள்,சிறு குறு தொழில் முனைவோர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,கல்லூரி மாணவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள்,பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், சமூக நல ஆர்வலர்கள், நகர் நல சங்கத்தின் நிர்வாகிகள்,மாற்றுதிறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள் என அனைத்து தரப்பு நபர்களும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை கனிமொழி எம்.பி தலைமையிலான 11 பேர் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் மனுவாக அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகர மேயர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







