பாஜக கூட்டணி வெற்றிக்குஅயராது உழைப்பேன்; தூத்துக்குடியில் சரத்குமார் பேட்டி
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை வந்தார்.
பின்னர் தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-‘
வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் என்னுடன் பயணிக்கும் சகோதரர்களுக்கு வாய்ப்பு வாங்கி தருவேன். தேர்தலில் போட்டியிடாதது எனது விருப்பம். நான் சுயநலமாக சிந்திக்கவில்லை, உடன் பயணிப்பவர்கள் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன்”

எங்கள் கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்பேன்.பாஜக மதவாத கட்சி என்று திமுக பிரச்சாரம் செய்கிறது. ஆனால் சிறுபான்மையினர் நலனுக்காக, அவர்களை பாதுகாக்க திமுக என்ன செய்துள்ளது?”
காஷ்மீர், மணிப்பூர் பிரச்சினையின் போது பிரதமர் நேரில் செல்லாதது ஏன்? என கேட்கிறீர்கள்., “காஷ்மீரில் நடந்த பிரச்சினைக்கு பிரதமர் செல்ல வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், கரூரில் கூட்டநெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த போது ஏன் நேரில் செல்லவில்லை என விஜய்யிடம் நீங்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்”
என்னையும், விஜய்யையும் ஒப்பிடாதீர்கள். 28 ஆண்டுகள் எனக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. எம்.பி., எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளேன். ரஜினி, அஜித் எங்கு சென்றாலும் கூட்டம் வரும். ஆனால் அக்கூட்டம் வாக்குகளாக மாறுமா என்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்”
இவ்வாறு சரத்குமார் கூறினார்,







