கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), வணிக நிர்வாகப் பகுப்பாய்வு (B.Com Business Analytics) துறை மற்றும் நிறுவன புதுமை மன்றம் (Institution’s Innovation Council). சார்பில் “சிந்தி, உருவாக்கு, புதுமைப்படுத்து”என்ற தலைப்பில் வடிவமைப்பு சிந்தனை பயிற்சிப் பட்டறையை கல்லூரி கருத்தரங்கு அரங்கில் நடத்தின, நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் பா.கிருபாகரன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் மூ.சுப்புலட்சுமி தலைமையுரையாற்றி, மாணவர்களுக்கு புதுமை மற்றும் சிந்தனை திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கல்லூரி […]
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு 2013 முதல் 2024 வரையில் படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க நிர்வாகி, முன்னாள் ராணுவ வீரருமான ஜெயபிரகாஷ் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சித் திறன் மேம்பாட்டு மற்றும் கல்லூரி வளர்ச்சி போன்றவற்றை முன்னெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் […]
கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் […]
திருப்பூரில் இன்று திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாட்டில் கூடியுள்ள மகளிரைப் பார்க்கும் போது, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகத் தெரிகிறது. எப்போதுமே தி.மு.க. தேர்தல் அறிக்கையே ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறோம். அது உறுதி. பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. திரண்டுள்ள […]
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே கரூரில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், விசாரணைக்காக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் […]
சேலத்தில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று(டிசம்பர் 29) காலை நடைபெற்றது. பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டணி முடிவு, வேட்பாளர்கள் தேர்வுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் என 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் ஒவ்வொருவராக பேசிய நிலையில் இறுதியாக பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் பேசினார். பேச்சின் தொடக்கத்திலேயே அன்புமணி பற்றி பேசியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அருகில் இருந்த அவரது மகள் ஸ்ரீகாந்தி, ராமதாஸை தேற்றினார். ஒருநாள் தன்னுடைய […]
ஆங்கிலேய மிஷனரிமார்களால் 1914ல் ஆரம்பிக்கப்பட்ட கோவில்பட்டி தமிழ் பாப்திஸ்து பள்ளிகளின் சார்பாக இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழா, ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் லால்பகதூர் கென்னடி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சுபாஷ், பாபுசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி பாஸ்கரன், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் […]
சென்னை தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான புதிய பாலத்துக்கு சிவாஜிகணேசன் பெயர்: காங்கிரஸ்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தை, சென்னை, தலைமைச் செயலகத்திலுள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில், தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவின் துணைத் தலைவர் மயிலை அசோக்குமார் தலைமையில் நிர்வாகிகள் அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தமிழ்த்திரையுலகின் தூணாக, தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அரை நூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவில் தன் தனிச்சிறப்புவாய்ந்த நடிப்பின்மூலம் சுதந்திரப் போராட்ட வீரர்கள், […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கமும் அரவிந்த் கண் மருத்துவமனனயும் இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் டிசம்பர் மாத கடைசி ஞாயிறு அன்று (28-12.25 ) கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை தாங்க செயலாளர் என்,ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம்,110/11KV கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 29.12.2025 திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. கோவில்பட்டி டவுண், காந்திநகர், திலகர்நகர், இந்திரா நகர் வடக்கு, தெற்கு, அத்தைகொண்டான், சீனிவாசாநகர், கிருஷ்ணாநகர், மீனாட்சி நகர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, மஞ்சு நகர், ஆலம்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம், இராமலிங்கபுரம், […]







