கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 15 பேர் தேர்வு
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கமும் அரவிந்த் கண் மருத்துவமனனயும் இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் டிசம்பர் மாத கடைசி ஞாயிறு அன்று (28-12.25 ) கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாணவர் சங்க தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை தாங்க செயலாளர் என்,ராஜவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், ராஜேந்திரன், மணிக்கொடி, பாலசுப்ரமணியன்,.திருச்சிற்றம்பலம்.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

முகாமில் 164 நோயாளிகள் பரிசோதனைகளுக்கு பரிசோதனை நடந்தது. இதில் கண்புரை இலவச அறுவை சிகிச்சைக்கு 15 பேர் யொல்தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அர்விந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு எந்த வித செலவும் இ ல்லாமல் கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.







