கோவில்பட்டி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை
கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீஅலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னதியில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார்.

விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன் மற்றும் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







