கோவில்பட்டி அரசு கலை கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு 2013 முதல் 2024 வரையில் படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க நிர்வாகி, முன்னாள் ராணுவ வீரருமான ஜெயபிரகாஷ் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சித் திறன் மேம்பாட்டு மற்றும் கல்லூரி வளர்ச்சி போன்றவற்றை முன்னெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் சந்தன மாரியம்மாள், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர் பதவிகளுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.







