கோவில்பட்டி கல்லூரியில் வடிவமைப்பு சிந்தனை பயிற்சிப் பட்டறை
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), வணிக நிர்வாகப் பகுப்பாய்வு (B.Com Business Analytics) துறை மற்றும் நிறுவன புதுமை மன்றம் (Institution’s Innovation Council). சார்பில் “சிந்தி, உருவாக்கு, புதுமைப்படுத்து”என்ற தலைப்பில் வடிவமைப்பு சிந்தனை பயிற்சிப் பட்டறையை கல்லூரி கருத்தரங்கு அரங்கில் நடத்தின,
நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் பா.கிருபாகரன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் மூ.சுப்புலட்சுமி தலைமையுரையாற்றி, மாணவர்களுக்கு புதுமை மற்றும் சிந்தனை திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கல்லூரி இயக்குநர் பா. மகேஷ்குமார் பாராட்டு உரையாற்றினார்.

முதன்மை விருந்தினராக EDII-TN மாஸ்டர் டிரெய்னர் மற்றும் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி (தன்னாட்சி) வணிக நிர்வாகத் துறைத் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் எஸ். காயத்ரி கலந்து கொண்டு, வடிவமைப்பு சிந்தனை, புதுமை, தொழில்முனைவு மற்றும் தொழில்துறை தேவைகளுக்கேற்ற திறன்கள் குறித்து உரையாற்றினார்.
முன்னதாக புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியர் ரா. வெங்கடேஷ்வரா முதன்மை விருந்தினரை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியின் இறுதியில் நிறுவன புதுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் கலந்து கொண்டு, சிந்தனை திறன், படைப்பாற்றல் மற்றும் புதுமை குறித்து பயனுள்ள அறிவைப் பெற்றனர்.







