கோவில்பட்டி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு; பக்தர்கள் குவிந்தனர்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலுடன் இணைந்த நீலாதேவி – பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
காலை 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை சுந்தரராஜ பெருமாள் சயனக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி சுந்தரராஜ பெருமாள், சுவாமி நம்மாழ்வாருக்கு காட்சி கொடுத்தார். அவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. பூஜைகளை வரதராஜ அய்யங்கார், கோவிந்தராஜ அய்யங்கார் ஆகியோர் செய்திருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், சண்முகராஜ், நிறுத்திய லட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, துணை தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், தமாகா மாவட்ட தலைவர் ராஜகோபால், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி,போடுசாமி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேந்திரன், இந்து ஆலய பாதுகாப்பு நிர்வாகி பரமசிவம் மற்றும் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது







