கோவில்பட்டியில் பாஜக சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு

கோவில்பட்டி கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று சார் ஆட்சியரை சந்தித்து கொடுத்த மனுவில் நமது மண்டலுக்கு உட்பட்ட பஞ்சாயத்து, கிராமங்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வரும் 12-1-2026 திங்கள்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

பாஜக மாநில சிறப்பு பொதுக்குழு உறுப்பினர்.பாலமுருகன், மாநிலச் செயலாளர் அயலக தமிழர் பிரிவு.மாரியப்பன் கூட்டுறவு பிரிவு. மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து, மாவட்டத் தலைவர் அயலக தமிழர் பிரிவு.சுப்புராஜ் அவர்கள், மாவட்டத் துணைத் தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவராமன், கோவில்பட்டி-கிழக்கு மண்டல் தலைவர் மகாலட்சுமிவேல்முருகன் மண்டல் பொதுச்செயலாளர் .லட்சுமி உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்,
=







