“கம்மவார்களை” பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கம்ம நாயுடு மகாஜன சங்க இளைஞரணி மாநாட்டில் வலியுறுத்தல்
தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம் மாநில இளைஞரணி மாநாடு , திருவள்ளூர் மாவட்டம், கொழுந்தாலூரில் நடைபெற்றது, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.வருமாறு:-
*நீண்டநாள் கோரிக்கையான” கம்மவார்களை” பிற்பட்டோர்பட்டியலிலும் “வடுகர்களை” மிகவும் பிற்பட்டோர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும்,
*கம்ம குல இளைஞர் சமுதாயத்தில் விளையாட்டு துறையில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அரசு பதவிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்,

* கோவில்பட்டியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி முழு உருவ வெண்கல சிலை அமைத்து தர வேண்டும்.
*2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளிலும் எமது சமுதாயத்தைச சார்ந்த தகுதி வாய்ந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
*பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு உறுப்பினர், தகவல் பெறும் ஆணையர் பதவிகளில் எம் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட இல்லாததால் மேற்படி பதவிகளில் எம்மினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும்,

*சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்க உள்ள நீதிபதி பதவிகள் மற்றும் மாவட்ட நீதிபதி போன்ற பதவிகளில் எமது சமூகத்தைச் சேர்ந்த தகுதி உள்ளவர்களை நியமிக்க வேண்டும்,
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,







