அரசின் நலத்திட்டங்களை பெற நலவாரியத்தில் கிராம மக்கள் இணைய வேண்டும்; சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் வேண்டுகோள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், நூத்துலாபுரம் ஊராட்சி, என். ஊத்துப்பட்டியில் தமிழக அரசு வழங்கும் சீர் மரபினர் நல வாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரியம் மாநில உறுப்பினர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக சீர்மரபினர் பழங்குடி பாதுகாப்பு குழு மாநில பொறுப்பாளர்கள் அண்ணாதுரை, ராஜாராம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சீர் மரபினர் அமைப்புப் பொறுப்பாளர் காசிமாயன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழக அரசு சீர்மரபினர் நல வாரிய மாநில உறுப்பினர் சந்திரன் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள டி. என். டி. என்ற சீர்மரபு வழி பழங்குடியினர் இன்னும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு இல்லாமல் அரசு வழங்கும் சலுகைகளை பெறுவதற்கு அதற்குரிய நலவாரிய அட்டையை சீர்மரபு வழி பழங்குடியினருக்கு ஒவ்வொரு நபருக்கும் அரசு சீர்மரபினர் நல வாரியத்தை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்ல அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு நல வாரியத்தை அவசியமாகிறது.

இதனை கிராம மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றனர். எனவே கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசின் நலத்திட்டங்களை பெற சீர் மரபினர் மக்கள் மனுக்களை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் என்.ஊத்துப்பட்டி, பள்ளபட்டி . நிலக்கோட்டை மற்றும் பல்வேறு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.







