புத்தாண்டு கொண்டாட்டம்: டிஜே பார்ட்டி ஏற்பாடு செய்தால் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது
2026ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான வியாழக்கிழமை அன்றும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் பொதுஇடங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை
டிசம்பர் 31ஆம் தேதி அன்று இரவு டி.ஜே. பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் .

இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செய்தால் கைது மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வீலிங் செய்வது, மதுபோதையில் மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை..

2500 போலீசார் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, இரவு நேரங்களிலும் துல்லியமாக பார்க்கக்கூடிய டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு ஆல்பர்ட் ஜான் கூறி உள்ளார்







