தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் நியமனம்
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த ஆல்பர்ட் ஜான் ஏற்கனவே பணியிட மாற்ற உத்தரவு வெளியாகி வந்து பணியிட மாறுதலுக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்கனவே உள்ள பணியிட மாறுதலில் அவர் தூத்துக்குடியில் இருந்து பணி மாறுதல் ஆகி செல்ல உள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றியவர்.







