கோவில்பட்டி இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி ஆண்டு விழா.
ஆங்கிலேய மிஷனரிமார்களால் 1914ல் ஆரம்பிக்கப்பட்ட கோவில்பட்டி தமிழ் பாப்திஸ்து பள்ளிகளின் சார்பாக இலுப்பையூரணி தமிழ் பாப்திஸ்து பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழா, ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் லால்பகதூர் கென்னடி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சுபாஷ், பாபுசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி பாஸ்கரன், கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர்.

ஞானரத்தினம் | டி.என்.பி.டி.எப் மாவட்ட தலைவர் செல்வராஜ், லட்சுமி ஆலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் பாப்திஸ்து நிர்வாகத்தின் கீழ் உள்ள 13 பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்,ஏராளமான பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை செல்வி மாணவர்களுக்கான அனைத்து பரிசுப் பொருள்களையும் வழங்கினார்.
தெற்கு கோனார் கோட்டை பள்ளி தலைமையாசிரியர் ராஜையா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பள்ளியின் மூத்த ஆசிரியை கிருபைஜோதி நன்றிகூறினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் சொர்ணத்தாய், கிறிஸ்டி ரூபி ரோஸ்லின், மேரி மகிமை ராணி, ஐஸ்வர்யா, ஜெயபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.







