சின்னமலைக்குன்று ஊராட்சி கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் ; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,சின்னமலைக்குன்று ஊராட்சி, திப்பனூத்து கிராமத்தில் ரூ.22.50-லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இதே போல் சின்னமலைக்குன்று ஊராட்சி,நாவலக்கன்பட்டி கிராமத்தில் ரூ.17-லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்கண்டேயன் தொடக்கி வைத்தார்,. மேலும் , சின்னமலைக்குன்று ஊராட்சியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் […]







