விருதுநகர் டிரேடு சிட்டி ரோட்டரி கிளப் உதயமாகிறது; விழா தொடர்பான கலந்துரையாடல் கூட்டம்
விருதுநகர் டிரேடு சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் தணிகைவேல் பாண்டியன், ஆலோசகர் குருசாமி அண்ணாச்சி.

ரோட்டரி சங்கம் என்பது சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுச் சங்கமாகும். இது உலகில் நல்லெண்ணம், அமைதி ஆகியவற்றை உருவாக்க உதவும் பொருட்டு வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற, நிறம், இனம், மதம், பால், அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு திறந்த அமைப்பு ஆகும்.
அந்த வகையில் விருதுநகர் ரோட்டரி கிளப் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக விருதுநகர் டிரேடு சிட்டி ரோட்டரி கிளப் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக உள்ளது. இதன் தலைவராக பி.தணிகைவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அமைப்பின் ஆலோசகராக கே.சி.குருசாமி அண்ணாச்சி உள்ளார்.
இதுவரை 25 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கும் நிலையில் விருதுநகர் டிரேடு சிட்டி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தொடர்பாக திட்டமிடுதல் கலந்துரையாடல் கூட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி விருதுநகர் ரோட்டரி ஹாலில் இரண்டாவது கல்ந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தொடக்கத்தில் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகிக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதன் மூலம் உறுப்பினர்கள் அறிமுகம் ஆகிகொண்டனர். தொடர்ந்து ஆலோசகர் கே.சி.குருசாமி அண்ணாச்சி, கிளப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் செயல் உத்திகள் குறித்து உரையாடினார்.
அவர் கூறுகையில்,” ரோட்டரி கிளப்பில் குறைந்த பட்சம் 30 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அதிக பட்சம் 35 பேர் வரை இருக்கலாம். அப்படியானால் தான் ஒவ்வொரு உறுப்பினரும் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கிளப்புக்கு இன்னும் சில உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வாரந்தோறும் நடக்கும் கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்வதுடன், கருத்தரங்கம், மாநாடு போன்றவற்றிலும் பங்கேற்க வேண்டும். இதன் மூலம் உங்கள் ஒவ்வொருவரின் தொழிலையும் உயர்த்திகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்” என்று குறிப்பிட்டார்.

டிரேடு சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் பி.தணிகைவேல் பாண்டியன் பேசுகையில் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கும் சில நிர்வாகிகள் பெயர்களை அறிவித்தார்., அதன்படி செயலாளராக பிரபாகரன், பொருளாளராக சிவசாமிநாதன், அசெம்பிளி ஆப் சேர்மனாக சங்கர், பவுண்டேசன் ஆப் சேர்மனாக ராஜலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்ற நிர்வாகிகள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.
டிரேடு சிட்டி ரோட்டரி கிளப்பின் அடுத்த ஆண்டு தலைவராக சிவராஜ்குமார் தேர்வாகி இருக்கிறார். என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் ராஜகுரு, கண்ணன், பாஸ்கரன், ரகு, ஜான் லிங்க்ஸ் பாலமுருகன்,சியாமளா, ரேவதி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி,ஆஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







