கூட்டணி குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்


அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தற்காலிக அவை தலைவர் கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார்,’
கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில முக்கியமான தீர்மானங்களின் விவரம் வருமாறு:
*வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிட அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம்

*தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும்.
*கூட்டணி குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்.
*கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது.மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளன.
*நீதித்துறைக்கே சவால் விடுக்கும் திமுகவின் ஆதிக்க மனப்பான்மையை கண்டிக்கிறோம்.
*எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை அதிமுக வரவேற்கிறது.
*அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்! குறையும் முதலீடுகள் இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்! தமிழக இளைஞர்களுக்கு எட்டாக்கனியான வேலை வாய்ப்புகள். தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி, பொய் புரட்டு போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்!

*விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வல்லவர்கள் திமுக-வினர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவரது குடும்ப உறுப்பினர்கள். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என்று தொடங்கி மதுரை மேயர் ராஜினாமா என்கிற அளவுக்கு. ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழும் திமுக அரசுக்கு கண்டனம்.
*உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை தமிழ் நாட்டிலேயே மிக நீளமான பாலத்தை 1,621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கழக அரசு கொண்டுவந்த திட்டத்தை, ஸ்டிக்கர் ஒட்டி ஃபெயிலியர் மாடல் திமுக அரசு, தான் கொண்டுவந்ததாக திறப்பு விழா நடத்தி இருக்கும் திமுக அரை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







