கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

கோவில்பட்டி ரோட்டரி சங்க வாராந்திர கூட்டம் சவுபாக்கியா மஹாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார், செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்,
மாவட்ட முன்னாள் ஆளுநர் நவமணி ரோட்டரியின் சேவைகுறித்த கருத்துகளை வழங்கினார்.

இந்த மாதம் மக்கள் சேவை தீர்மானம் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ்,ரோட்டரி சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமாருக்கு அகில இந்திய தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







