சின்னமலைக்குன்று ஊராட்சி கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் ; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.அடிக்கல் நாட்டினார்
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,சின்னமலைக்குன்று ஊராட்சி, திப்பனூத்து கிராமத்தில் ரூ.22.50-லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
இதே போல் சின்னமலைக்குன்று ஊராட்சி,நாவலக்கன்பட்டி கிராமத்தில் ரூ.17-லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்கண்டேயன் தொடக்கி வைத்தார்,.

மேலும் , சின்னமலைக்குன்று ஊராட்சியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,ஸ்டீபன் மற்றும் திமுக நிர்வாகிகள் , தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.







