எட்டயபுரம் மணி மண்டபத்தில் பாரதியார் சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியார் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து ,மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷூ மங்கல்,எட்டயபுரம் பேரூராட்சி தலைவர்.ராமலட்சுமி ,வட்டாட்சியர் .சுபா அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் அரசு சார்பில் எட்டயபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர்.பி.கீதா ஜீவன் உள்ளிட்ட அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,







