தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து கோவிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கருப்பசாமி (வயது 19), கருப்பசாமி […]
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமைமருத்துவமனையில் 35 க்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு முட்டை,மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வம் முன்னிலைவகித்தார். செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார்.உறுப்பினர்கள் கண்ணன், இளங்கோ, அருண் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஜெனார்த்தனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- “சென்னை, வானிலை ஆய்வு மையத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தியில், 24.10.2025 முதல் 27.10.2025 வரையிலான தேதிகளில், தமிழக கடலோர பகுதிகள் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார்வளைகுடர் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25.10.2025 அன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் […]
சென்னை ஐகோர்ட்டில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.பி.பழனி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை கந்தகோட்டத்தில் உள்ள முத்துகுமார சாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து வழிபாடு செய்கின்றனர். இதனால் இந்த கோவிலுக்கு மிகப்பெரிய தொகை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த சாமியின் மீதுள்ள பக்தியில் ஏராளமானோர் தங்களது சொத்துகளை எழுதி கொடுத்துள்ளனர். அந்த வகையில், சென்னை ஜார்ஜ் டவுண், நயனியப்ப நாயக்கன்தெரு, சவுகார்பேட்டை அண்ணாபிள்ளை தெரு, திருபள்ளித்தெரு, பெரியமேடு கற்பூரமுதலி தெரு […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இளையோர் செஞ்சிலூவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் (180) சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தினம் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட நலக்கல்வியாளர் முத்துசாமி, சுகாதார அலுவலர் பாலசுப்ரமணியன், […]
லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்துள்ளதாக கூறி தஞ்சை பெண்ணிடம் ரூ.47 லட்சம் மோசடிதஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 64 வயதான ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியரின் செல்போனிற்கு கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி வெளிநாட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் ஒருவர், நான் உன்னுடன் கல்லூரியில் படித்த சக தோழி என்றும், தற்போது லண்டனில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். தொடக்கத்தில் யார் என தெரியாமல் குழம்பிய தஞ்சை பெண்ணிடம், […]
கோவில்பட்டி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பள்ளி மாணவ/, மாணவியர் கலைத்திருவிழா நடைபெற்றது. கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் அக்டோபர் 14 முதல் 22 ந்தேதி வரை கலைத்திருவிலாவில் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் மரிய ஜான் பிரிட்டோ கலைத்திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர்கள் ராமசுப்ரமணியன், சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் , கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி […]
தூத்துக்குடி மாவட்ட நீதி மன்றத்தில் அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் கார்த்திக்ராஜா என்பவர் விளாத்திகுளத்தில் ஒரு பொதுத் துறை வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஏடிஎம் அட்டையும் பெற்றுள்ளார். இந்த ஏடிஎம் அட்டையின் மூலம் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். பணம் வரவில்லை. ஆனால் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்ததாக குறுஞ் செய்தி வந்துள்ளது. இது குறித்து வங்கியிடம் புகார் […]
மதுரையை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-எனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை இல்லை. இந்த நிலையில் என்னுடைய சகோதரருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் என் சகோதரர் இறந்துவிட்டார். இதனால் அவரது மகனை தத்தெடுக்க முடிவு செய்தோம். இதற்கு என் அண்ணன் மனைவி சம்மதம் தெரிவித்தார். சட்டப்படி குழந்தை தத்தெடுப்புக்கு பதிவுத்துறையில் விண்ணப்பித்தேன். ஆனால் தத்தெடுப்பு நடவடிக்கையை இஸ்லாம் மதம் அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிகாரிகள் மறுத்து உத்தரவிட்டு […]
ஒவ்வொரு தீபாவளிக்கும் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதிய ரக தீபாவளி துப்பாக்கி ஒன்று உள்ளூர் சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. அந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலக்கும்போது பெரும் வெடி சத்தத்துடன் அசிட்டிலின் என்ற வாயு வெளியாகிறது. இந்நிலையில், இந்த புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் […]







