கோவில்பட்டியில் மாணவ, மாணவியர் கலைத்திருவிழா
கோவில்பட்டி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் வட்டார அளவில் பள்ளி மாணவ/, மாணவியர் கலைத்திருவிழா நடைபெற்றது.
கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் அக்டோபர் 14 முதல் 22 ந்தேதி வரை கலைத்திருவிலாவில் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

மாவட்ட கல்வி அலுவலர் மரிய ஜான் பிரிட்டோ கலைத்திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர்கள் ராமசுப்ரமணியன், சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரவீந்திரன் , கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அண்ணாமலைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
பள்ளி ஆய்வாளர் ரமேஷ், வட்டார வளமையத்தின் மேற்பார்வையாளர். நட்டாத்தி, கணேசமூர்த்தி மற்றும் உதவிப் பேராசிரியர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் மாணவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றைப் பரைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இப்போட்டியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.







