போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் இளையோர் செஞ்சிலூவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் (180) சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தினம் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட நலக்கல்வியாளர் முத்துசாமி, சுகாதார அலுவலர் பாலசுப்ரமணியன், சுகாதார கண்காணிப்பாளர் .கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இம்முகாம் ஏற்பாடுகளை கல்லூரி செயலர் ப.மகேந்திரன், முதல்வர் மூ.சுப்புலெட்சுமி, இயக்குனர் பா.மகேஷ்குமார் ஆகியோர் வழிகாட்டுதல்படி, கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் கு.மாரியப்பன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அலுவலர் மு.மாரிசாமி ஆகியோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.







