குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16127-16128) கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில், இருமார்க்கங்களிலும் நிற்காமல் சென்று வந்தது. இந்த ரெயில் வருகிற 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தினமும் சென்னையில் இருந்து வரும் இந்த ரெயில் (16127) இரவு 7.53 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். அங்கிருந்து கடம்பூருக்கு இரவு 8.07 மணிக்கு சென்று, இரவு 8.08 […]
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இந்நிலையில் ‘மோன்தா” புயல் இன்று மாலை அல்லது இரவு வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக மசூலிபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் […]
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத் துறையை சார்ந்த மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாசெல்வி ஆகியோர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பள்ளிகூட பகுதிகளில் பீடி , சிகரெட் விற்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் (நெகிழி ) கடைகளில் பயன்படுத்துகிறதா? என்ற சோதனை நடைபெற்றது.இந்த சோதனையின் போது 507 கிலோ தடை […]
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்தது. கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் சாந்திப்பிரியா தலைமை தங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் பாபு,சசி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி பயிற்றுனர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட புகையிலை எதிர்ப்பு ஆலோசகர் டாக்டர் வேணுகா புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட […]
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி! தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, […]
மாமல்லபுரத்தில் தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குசாவடி-வெற்றி வாக்குசாவடி பயிற்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது, திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசியதாவது: – எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு (திமுக நிர்வாகிகள்), இந்த பயிற்சிக் கூட்டம் என்பது, எக்ஸாம்க்கு பிரிப்பேர் ஆகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு, மீண்டும் ஒருதடவை ரிவிஷன் பண்ணுவாங்கள்ல அப்படி, எலக்ஷன் எனும் எக்ஸாம் முன்னாடி நாம் பண்ற ரிவிஷன்தான், இந்த பயிற்சிக் கூட்டம். 2019-ஆம் ஆண்டு முதல், […]
‘காளிதாஸ்’ (2019 ம் ஆண்டு வெளியானது) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்கிரெடிபிள் புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையை கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் சிவநேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் சிவநேசன் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், […]
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவில்பட்டி வருகை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று 28.10.2025 மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னையில் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 5.50 மணிக்கு சென்னை விமான நிலையம் அடைகிறார். மாலை 6 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து இரவு 7.40 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று 8 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 9..30 மணிக்கு கோவில்பட்டி வருகிறார். […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர்.தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வாகன வீதி உலா நடைபெற்று வருகின்றன. கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை […]
வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன் ; கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம்
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி த.வெ.க. சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 […]







