சிவநேசன் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம்

‘காளிதாஸ்’ (2019 ம் ஆண்டு வெளியானது) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்கிரெடிபிள் புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது.
எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையை கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தின் சிவநேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் சிவநேசன் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார்.

இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (ஹார்ட் பீட் வெப் சீரியல் புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
தயாரிப்பு : எஸ்.சிவநேசன்
இயக்குநர்: எஸ்.சிவநேசன் (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்)
இசை: விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா
படத்தொகுப்பு: புவன் சீனிவாசன்
கலை இயக்குனர் – எம்.மணிகண்டன்
புரொடக்ஷன் எக்சிகியுடிவ் – வி.முத்துகுமார்
புரொடக்ஷன் மேனேஜர் – ரமீஸ் ராஜா
காஸ்டுயும் டிசைனர் – கிஷோர்
ஸ்டில்ஸ் – ஜெயராமன்
மக்கள் தொடர்பு – சதீஷ்







