இன்று இரவு 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவில்பட்டி வருகிறார்
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவில்பட்டி வருகை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இன்று 28.10.2025 மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், சென்னையில் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு 5.50 மணிக்கு சென்னை விமான நிலையம் அடைகிறார்.
மாலை 6 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து இரவு 7.40 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்று 8 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு 9..30 மணிக்கு கோவில்பட்டி வருகிறார்.

இளையரசனேந்தல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக நகர கட்சி அலுவலகம் மற்றும், கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைக்கிறார்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் முக்கூடல் சென்று இரவு தங்குகிறார்,
நாளை 29.10.2025 காலை 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 11 மணிக்கு தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்று அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.
பின்பு 11.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 11.30 மணிக்கு அனந்தபுரம் சென்று அங்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு அமர் சேவா சங்கம் சென்று பார்வையிடுகிறார்.
பின்பு அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு தென்காசி கெஸ்ட் ஹவுஸ் சென்று தங்குகிறார்,

மாலை 5.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு மதுரை சர்க்யூட் ஹவுஸ் சென்று தங்குகிறார்,
மறுநாள் 30.10.2025 காலை அங்கிருந்து புறப்பட்டு 7.45 மணிக்கு கோரிபாளையம் சென்று அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு 8 மணிக்கு தெப்பக்குளம் சென்று அங்கு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்பு அங்கிருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் சென்று அங்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டு பின்பு அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு 12.30 மணிக்கு மதுரை விமான நிலையம்செல்கிறார்.

மதியம் 1.30 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 2.40 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறார்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவில்பட்டி வருகையை முன்னிட்டு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இளைரசனேந்தல் சாலை முழுவதும் இரவை பகலாக்கும் வகையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் மின்விளக்கு அலங்கார கட் அவுட்டுகள், சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளன.







