கோவில்பட்டியில் கடைகளில் அதிரடி சோதனை; 507 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்


கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத் துறையை சார்ந்த மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாசெல்வி ஆகியோர் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
பள்ளிகூட பகுதிகளில் பீடி , சிகரெட் விற்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள் (நெகிழி ) கடைகளில் பயன்படுத்துகிறதா? என்ற சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போது 507 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை கண்டறிந்து, கோவில்படி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த அதிரடி சோதனையின் போது பொது இடங்களில் புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் பயண்படுத்த கூடாது என விழிப்புணர்வு மற்றும் நலக்கல்வி அளிக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்கள் கைப்பற்றப்பட்ட கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.10,000 மேலும் பள்ளிகளுக்கு அருகில் புகையிலை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் மாவட்ட நலக்கல்வியாளர் முத்துச்சாமி, வட்டார சுகாதர மேற்பார்வையாளர் கருணாநிதி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் ஆர்.அய்யலுசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







