புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்தது.
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் சாந்திப்பிரியா தலைமை தங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் பாபு,சசி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி பயிற்றுனர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

தூத்துக்குடி மாவட்ட புகையிலை எதிர்ப்பு ஆலோசகர் டாக்டர் வேணுகா புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கல்லூரி பயிற்றுனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.







