தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி வாக்கு திருடனே பதவி விலகு பிரசாரம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் தலைமை தாங்கினார்,மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பிரேம்குமார், பொன்னுசாமி பாண்டியன், அருண்பாண்டியன், மாரிமுத்து,சுப்புராயிலு, பெத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கோவில்பட்டி பழைய […]
தூத்துக்குடி முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் சுவிசேஷ முத்து (வயது 42). இவர் தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்போது டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2ஆம் தேதி அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுவிசேஷ முத்து மனைவியின் தங்கை கணவர் மாசானமுத்து உட்பட 5பேர் […]
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. குன்றத்தூரைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும், பின்னர் பிணத்தை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே உடலை தீவைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதை […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சி கல்லூரியில் செயலர் ப. மகேந்திரன் வழிகாட்டுதலின் படி உள் தர மதிப்பீட்டுக்கழகம் (IQAC) சார்பில் பேராசிரியர்களுக்கு “கற்றல் மேலாண்மை அமைப்பு– செயல்முறைப் பயிற்சி” நடைபெற்றது. இப்பயிற்சியில் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியரும், தேர்வுத்துறைத் துணை கட்டுப்பாட்டாளருமான எஸ். சுகந்தி சிறப்புரையாளராகக் கலந்து கொண்டு, கற்றல் மேலாண்மை அமைப்பின் பயன்பாடுகள், செயல்முறை மற்றும் கற்பித்தல் – கற்றல் செயல்பாட்டில் அதன் தாக்கம் குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். திரு. ரா. வெங்கடேசன், […]
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அதிமுக கட்சி அமைப்பு ரீதியாக விளாத்திகுளம் மேற்கு , கிழக்கு என செயல்பட்டு வந்த ஒன்றியங்கள், மாவட்ட அதிமுக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம், மேற்கு ஒன்றியம் என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஒன்றியச் செயலாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கிழக்கு ஒன்றியம் அதன்படி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக ஓ.லட்சுமி நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரா.இராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு […]
கோவையில் புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதா? சீமான் கடும் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-‘ கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை – அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி […]
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயிலுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு; அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்
திருநெல்வேலி- சென்னை எழும்பூா் – இடையே சென்னை எழும்பூா் -கடந்த 2023 ம் ஆண்டு செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயிலுக்கு கோவில்பட்டி நிறுத்தம் இல்லாமல் இருந்தது. திருநெல்வேலிக்கு அடுத்து விருதுநகரில் நின்று சென்று வந்தது. இதனால் கோவில்பட்டி மக்களால் இந்த ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை. எனவே கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்தது, இதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் […]
தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது , இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர்,நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மகிதா மற்றும் பாண்டி முனீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றனர். பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் ஆகியோர் பாராட்டினார்கள்
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார்,முருகன், தங்கச்சாமி,அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அழகுராஜ்,சீனிவாசன், சின்னத்தாய், […]
தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உரிய முறையில் தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் துப்புரவு பணியில் மற்றும் கட்டிடப் பணி போன்ற வேலைகளை அளித்து வருகின்றனர். எனவே இதை தடுப்பதற்காக தமிழக அரசு பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொட்டலூரணி பகுதியில் மீன் […]







