வாக்குத் திருட்டை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ அறிவுறுத்தலின்படி வாக்கு திருடனே பதவி விலகு பிரசாரம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் ஏபிசிவி சண்முகம் தலைமை தாங்கினார்,மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பிரேம்குமார், பொன்னுசாமி பாண்டியன், அருண்பாண்டியன், மாரிமுத்து,சுப்புராயிலு, பெத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் கூடி இருந்த பயணிகள் முன்னிலையில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று கையெழுத்து வாங்கினார்கள்.

காங்கிரஸ் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல்ஞனதுரை, உமாசங்கர், மகேஷ்குமார், திருப்பதிராஜா,மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜன்டியூசி ராஜாசேகரன், சண்முகராஜா, சிவப்பிரகாசம்,மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட துணை தலைவர் அய்யலுசாமி,கந்தசாமி, துணை அமைப்பு தலைவர்கள் மருத்துவ அணி தலைவர் டாக்டர்.மாறன், சமூக ஊடகதுறை தலைவர் ராஜாசேகரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ,விவசாயபிரிவு தலைவர் பேரையா, தகவல் தொழிலநுட்பபிரிவு ஜேம்ஸ் லாரன்ஸ்,
சேவாதள பிரிவு தலைவர் சக்திவிநாயகம், மாணவர் காங்கிரஸ் தலைவர் மகாபிரபு, சுடலைமணி,அரவிந்த்,இருதயராஜ், மாரியப்பன்,மகிளா காங்கிரஸ் நல்லமதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், ரவிச்சந்திரன்,அப்பனசாமி, ஆறுமுகம், மேல்மந்தை கிருஷ்ணன், ஆனந்த்
வட்டார தலைவர்கள் செல்லதுரை, மரியசூசை ராஜ், முத்துகிருஷ்ணன்,விஜய், வேல்சாமி, யோகேஷ்வரன், அபிஷேக், போத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்







