நலத்திட்டங்கள் தொடக்கவிழா: மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி தென்காசி வருகிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
அவ்வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு varukira 24 ந் தேதி வருகை தர உள்ளார். முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா நடத்துவதற்கு, இலத்தூர் விலக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது தொடர்ந்து பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த இடத்தை பார்வையிட்டு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆவுடையப்பன், ராணி ஸ்ரீகுமார் எம்.பி. ஆகியோர் உடன் வந்து இருந்தனர்..
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தென்காசிக்கு வந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்’’ என்றார்.







