கல்லூரி பேராசிரியர்களுக்கு கற்றல் மேலாண்மை செயல்முறை பயிற்சி
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சி கல்லூரியில் செயலர் ப. மகேந்திரன் வழிகாட்டுதலின் படி உள் தர மதிப்பீட்டுக்கழகம் (IQAC) சார்பில் பேராசிரியர்களுக்கு “கற்றல் மேலாண்மை அமைப்பு– செயல்முறைப் பயிற்சி” நடைபெற்றது.
இப்பயிற்சியில் கணினி அறிவியல் துறை உதவிப்பேராசிரியரும், தேர்வுத்துறைத் துணை கட்டுப்பாட்டாளருமான எஸ். சுகந்தி சிறப்புரையாளராகக் கலந்து கொண்டு, கற்றல் மேலாண்மை அமைப்பின் பயன்பாடுகள், செயல்முறை மற்றும் கற்பித்தல் – கற்றல் செயல்பாட்டில் அதன் தாக்கம் குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.

திரு. ரா. வெங்கடேசன், உள் தர மதிப்பீட்டுக்கழக ஒருங்கிணைப்பாளர் வரவேற்று பேசினார்.. கணிதவியல் துறை தலைவரும் இணைபேராசியருமான அ. பாண்டியராணி முதல்வர் (பொறுப்பு) முன்னிலை வகித்தார்.
சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் (பொறுப்பு) பா. மகேஷ்குமார் வாழ்த்தி பேசினார் கற்றல் மேலாண்மை செயல்முறை பயிற்சியில் 120 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கருத்துக் கேட்பு சேகரிக்கப்பட்டது., உள் தர மதிப்பீட்டுக்கழக உதவி ஒருங்கிணைப்பாளர் ரா. சரவண செல்வக்குமார் நன்றி கூறினார்.







