கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயிலுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு; அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் குவிந்தனர்


திருநெல்வேலி- சென்னை எழும்பூா் – இடையே சென்னை எழும்பூா் -கடந்த 2023 ம் ஆண்டு செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரெயிலுக்கு கோவில்பட்டி நிறுத்தம் இல்லாமல் இருந்தது. திருநெல்வேலிக்கு அடுத்து விருதுநகரில் நின்று சென்று வந்தது. இதனால் கோவில்பட்டி மக்களால் இந்த ரெயிலில் பயணம் செய்ய முடியவில்லை.
எனவே கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்தது, இதை தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, மற்றும் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, துரை வைகோ எம்.பி. ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து கோவில்பட்டியில் நிறுத்தம் கோரி மனு அளித்தனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் அனுமதி அளித்தது. ‘அதனபடி திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரெயில் 9.10.2025 முதல் . கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே அறிவித்தது.
அதன்படி இந்த ரெயில் இன்று முதல் கோவில்பட்டியில் நின்று செல்கிறது. திருநெல்வேலியிலிருந்து .காலை 6.05 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரெயில்(20666) 6.38 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்தது. இந்த ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகள் ரெயில் வந்து நின்றதும் மகிழ்ச்சியுடன் ஏறி தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர்.
இதற்கிடையே ரெயிலுக்கு வரவேற்பு அளிக்க அதிமுக, மதிமுக மற்றும் பாஜகவினர் தங்கள் கட்சி கொடிகளுடன் திரண்டு வந்து இருந்தனர். மேள தாளம் முழங்க தனித்தனியாக வந்த அவர்கள் பயணிகள் மற்றும் லோகோ பைலைட்டுகளுக்கு இனிப்பு, கடலை மிட்டாய் கொடுத்து மகிழ்ச்சியை தெரிவிதுகொண்டனர்.
ரெயில் நிலையத்தில் மேள சத்தம் அதிகம் இருந்தது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வரவேற்று இனிப்பு வழங்கினார்கள். 2 நிமிடத்துக்கு பிறகு 6.40 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை மதியம் 1.55 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் (20665) இரவு 9.23 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் வந்து , 9.25 மணிக்கு திருநெல்வேலி புறப்பட்டு செல்லும்.
3 கட்சிகளை சேர்ந்தவர்கள் ரெயில் நிலையத்தில் திரண்டு இருந்ததால் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

வந்தே பாரத் ரெயில் வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சங்கக் கணேஷ். முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ராமர். ஆவின் தாமோதரன். ஒன்றிய செயலாளர் போடு சாமி. நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி. மாதவராஜ் ஆபிரகாம் ஐயா துரை.
மதிமுக சார்பில். துணைப் பொதுச்செயலாளர் தி மு.ராஜேந்திரன். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ். நகரச் செயலாளர் பால்ராஜ். மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன். குருவிகுளம் ஒன்றிய சேர்மன் விஜயலட்சுமி. தீர்மானக் குழு உறுப்பினர் முத்துச்செல்வன். கோடையடி ராமச்சந்திரன். மாவட்டத் துணைச் செயலாளர் தேவேந்திரன் நிர்வாகிகள் கொம்பையா முத்துப்பாண்டியன் வனராஜன் செண்பகராஜ் நாகராஜ் கனகராஜ்.
இதேபோல் பாஜக வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜா, தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







