மாவட்ட கேரம் போட்டி: கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவிகள் வெண்கல பதக்கம் வென்றனர்
தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் நடைபெற்றது , இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர்,நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு கேரம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மகிதா மற்றும் பாண்டி முனீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் ஆகியோர் பாராட்டினார்கள்







