கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் கூட்டம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் பொன்னுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார்,முருகன், தங்கச்சாமி,அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் நாகராஜ்,

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் அழகுராஜ்,சீனிவாசன், சின்னத்தாய், ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் அன்னராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் உத்ரகுமார்,
தொமுச நாகராஜ், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பாலம்மாள், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி, சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கற்பகம்,கிளைச் செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் கலந்து கொண்டனர்







