அரசு கட்டிடங்களுக்கு தலைவர்கள் பெயர் சூட்டக்கூடாது; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உரிய முறையில் தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் துப்புரவு பணியில் மற்றும் கட்டிடப் பணி போன்ற வேலைகளை அளித்து வருகின்றனர்.

எனவே இதை தடுப்பதற்காக தமிழக அரசு பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொட்டலூரணி பகுதியில் மீன் கழிவு அறைகளை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
உள்ளாட்சி நிர்வாகம் முழுவதும் ஊழல் ஆட்சி நிர்வாகமாக இருக்கிறது தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தமிழக அரசு சார்பில் தற்போது பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் ஆகியவற்றிற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டு வருகின்றன.
இது கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவிற்கு எதிரானது. எனவே அரசு கட்டிடங்களுக்கு கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு வைப்பதன் காரணமாக சாதி, மத, இன, மோதல்கள் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளது. சமூக வலைதளத்தில் பொறுப்பெற்ற முறையில் கருத்துக்களை பதிவிடுவது நியாயம் கிடையாது. ஆனால் தமிழக அரசு நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். அரசுக்கு சாதகமான கருத்துக்கள் பதிவிட்டாமல் பேசாமல் விட்டு விடுகிறார்கள். அரசுக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடுபவர்களை கைது செய்கிறார்கள்.
எனவே சமூக வலைதளங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். போலி கணக்கு வைத்திருப்பவர்கள் தான் பிரச்சினை. எனவே இந்த போலியான கணக்குகளை ஒழித்துக் கட்ட வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிருஷணசாமி கூறினார்,.







