ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தது.பஸ்சை ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்த சொரிமுத்து (வயது 48) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை எட்டயபுரம் அருகே உள்ள எம்.கோட்டூர் விலக்கு அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. டிரைவர் சொரிமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும் தறிகெட்டு ஓடிய பஸ் இடதுபுறம் சாலையோரத்தில் இருந்த […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது, பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது. […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (22.09.2025) நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 430 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை […]
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 3.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும். மேற்படி திருவிழாவை முன்னிட்டு 23.09.2025 அன்று நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு மற்றும் காப்புகட்டுதல் நிகழ்வை முன்னிட்டு கோவிலுக்கு […]
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே பிரதான சாலையில் இன்று காலை 10.45 மணியளவில் ஒரு வாலிபரை 3பேர் அரிவாளுடன் வழிமறித்தனர். .இதையடுத்து அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அவர்கள் விரட்டினர்,.அந்த வாலிபர் ஒரு மரக்கடைக்குள் புகுந்து ஒளிய முயன்றார். .ஆனால் மர்ம நபர்கள் அந்த வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார், இந்த கொலையை தொடர்ந்து 3 பெரும் […]
குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள்: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை 23.9.2025 கொடியேற்றத்துடன் தொடங்குகிறத., முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 2.10.2025 இரவு 12 மணிக்கு நடைபெறும். இதனையடுத்து 3.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும். திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் பற்றிய அறிவிப்பினை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சரக்கு வாகனங்களுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் மாற்றுப்பாதைகள்: 22.9.2025 அன்று மாலை 6 மணி முதல் 23.9.2025 ஆகிய […]
69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட 70 திரைப்படத்துறையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.திரைத்துறைக்கு நன்மை செய்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் […]
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். உலகதிருக்குறள் கூட்டமைப்பு துணைத்தலைவர் கருத்தப்பாண்டி, நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மனோகர் “கம்பனில் பார்த்த மங்கையும் கேட்ட மங்கையும்” என்ற தலைப்பிலும்,கம்பன் கழகத் தலைவர் துரைப்பாண்டி “நீடுதுயில் நீக்கப்பாடி […]
தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஒரு முள் செடிக்குள் அந்த பெண்ணின் உடல் தனியே கிடந்தது. தலை மற்றும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்த ராஜு […]
தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் 2 கப்பல் கட்டும் தளங்கள்: புரிந்துணர்வு ஒப்பந்தம்
தூத்துக்குடியில் உலக தரம் வாய்ந்த 2கப்பல் கட்டும் தளங்கள் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் கட்டுவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடியில் உலக தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்கள் உருவாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த 2 கப்பல் கட்டும் தளங்களை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]







