திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே பிரதான சாலையில் இன்று காலை 10.45 மணியளவில் ஒரு வாலிபரை 3பேர் அரிவாளுடன் வழிமறித்தனர்.
.இதையடுத்து அந்த வாலிபர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அவர்கள் விரட்டினர்,.அந்த வாலிபர் ஒரு மரக்கடைக்குள் புகுந்து ஒளிய முயன்றார்.
.ஆனால் மர்ம நபர்கள் அந்த வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்,

இந்த கொலையை தொடர்ந்து 3 பெரும் அங்கிருந்து ஓடிவிட்டனர், கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்து திருச்செந்தூர் தாலூகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசேததனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி காலனியை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 23) என்பது தெரியவந்தது. இவர் இன்று காலை ஆலந்தலையில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ்சில் வந்துள்ளார்.
பஸ்சில் இருந்து இங்கியதும் அவரை 3 பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது,
திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட மணிகண்டன், 17 வயது சிறுமியை காதலித்து வந்தாராம். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அந்த சிறுமி மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் திருச்செந்தூர் தாலூகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதீவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே தனது அக்காள் வீட்டை விட்டுச் சென்றதற்கு மணிகண்டன்தான் காரணம் என்று அவரது தம்பியான 15 வயது சிறுவன் கருதி கொலை திட்டம் வகுத்தது தெரிய வந்துள்ளது,
அந்த சிறுவன் தனது நண்பர்கள் 2பேருடன் சேர்ந்து மணிகண்டனை வெட்டிக் கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 சிறுவர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







