விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் அருள்மிகு முனியசாமி திருக்கோவில் ஆவணி கொடை விழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, குதிரை பந்தயத்தில் மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்செந்தூர், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 குதிரை வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டு 90 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்தன. அதேபோல் மாட்டுவண்டி பந்தயத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு […]
.கோவில்பட்டி இலுப்பையூரணி காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தார். பின்னர் அதை வீசி வெடிக்கச் செய்து, அந்தக் காட்சியை வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது, மேலும் சமூக வலைதளத்தில் இளைஞா்கள், இளஞ்சிறாா்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் எடுத்து அதை பதிவிட்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது, இதை தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி இலுப்பையூரணியை சோ்ந்த சுடலைமுத்து என்பவரின் […]
சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3644 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 3644 காலிப் பணியிடங்களுக்கு TNUSRB -இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வானது வரும் 9.11.2025 அன்று நடைபெறும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள்&
அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது; தமிமும் அன்சாரி குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமும் அன்சாரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை அழித்தால் தான் தங்களது எதிர் கால அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறது அதன் முதல் நிலைப்பாடு அதிமுக, ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவை தொட கூட முடியவில்லை. அவர் இறந்த பின்பு அதிமுகவின் தற்போது இருக்கக்கூடிய தலைமைத்துவ பலவீனத்தை பயன்படுத்தி கொண்டு கட்சியை சின்னாபின்னம் ஆக்கக்கூடிய எல்லா வேலையும் […]
கோவில்பட்டி போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வகுமார் (வயது 36). மற்றும் பெண் போலீசாக பணியாற்றி வந்த இந்திராகாந்தி (32) ஆகியோர் கடந்த மாதம் 17 ம் தேதி நடுரோட்டில் சண்டையிட்டனர். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் திருச்செந்துாருக்கும், பெண் போலீஸ் இந்திராகாந்தி புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்திரா காந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு, செல்வகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு […]
கோவில்பட்டி அத்தை கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. திருநெல்வேலி பொருநை மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை மருத்துவர் சிதம்பர தானு,எலும்பு முறிவு மருத்துவர் பால சுகுமார்,மகளிர் மருத்துவம் மருத்துவர் மோனிகா,பொது மருத்துவம் மருத்துவர் நாபூல்ஆகியோர் கலந்து கொண்டு 150க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.. ரோட்டரி மாவட்ட புரவலர் […]
நாடு முழுவதும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை அன்று,அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலில் கழுகு பங்களிப்பு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச கழுகுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் நடந்த கழுகுகள் தின விழா நடைபெற்றது. விழாவில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் கழுகு உருவ படத்திற்கு வண்ணம் தீட்டி கழுகு இனங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் […]
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசன முறையை கொண்டுவர கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருந்தால் பக்தர்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழக சட்டசபை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு எண் 206-ல் பக்தர்கள் பெருவாரியாக வரும் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் […]
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையவாங்கியது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அந்த சமயத்தில், 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் 18 கிராம ஊராட்சிகளில் நடந்தது. இதில் 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 18 கிராம ஊராட்சிகளில் 1ம் தேதி முதல் 6ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகதணிக்கை மேற்கொள்ளப்பட்டு […]







